இந்­தி­யாவின் பலம் இளை­ஞர்கள் வசம்: டி.பி.எஸ்.,இந்­தி­யாவின் பலம் இளை­ஞர்கள் வசம்: டி.பி.எஸ்., ... காலாண்டு முடிவுகள் காலாண்டு முடிவுகள் ...
முறை­கே­டு­களை தடுக்க...மருந்து விற்­ப­னைக்கும் வருது ‘பார்­கோடு’ :அரசின் திட்­டத்­திற்கு வணிகர்கள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2016
04:25

புது­டில்லி:மருந்­துகள், அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலையை விட, கூடு­த­லாக விற்­கப்­ப­டு­வதை தடுக்க, ‘பார்­கோடு’ தக­வலில், சில்­லரை விற்­பனை விலையை சேர்ப்­பது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கி­றது. ஒரு பொருளின் அனைத்து விப­ரங்­க­ளையும், அறிந்து கொள்ள பார்­கோடு தொழில்­நுட்பம் உத­வு­கி­றது. எண்கள் மற்றும் கோடு­க­ளுடன் காணப்­படும் பார்­கோடை, அதற்­கென உள்ள, ‘பார்­கோடு ரீடர்’ எனப்­படும் கரு­வியை பயன்­ப­டுத்தி, ஒரு பொருளின் முழு விப­ரங்­களை அறிந்து கொள்­ளலாம்.
ஏமாற்ற முடியாது:பல்­பொருள் அங்­கா­டி­களில், பார்­கோடு முறையில் தான், பொருட்­க­ளுக்கு ரசீது தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. நாட்டின் மருந்து ஏற்­று­ம­தியில், இந்த பார்­கோடு முறை பின்­பற்­றப்­ப­டு­கி­றது. தற்­போது, உள்­நாட்டில், மருந்­து­களின் சில்­லரை விற்­ப­னை­யிலும், பார்­கோடை பயன்­ப­டுத்­து­வது குறித்து, மத்­திய மருந்து துறை பரி­சீ­லித்து வரு­கி­றது. இதன் மூலம், மருந்து கடைக்­கா­ரர்கள், மருந்து அட்­டையில் குறிப்­பிட்­டுள்ள அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலையை மட்­டுமே நுகர்­வோ­ரிடம் வசூ­லிக்க முடியும்.
வரி­களை உள்­ள­டக்­கிய அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலையில், வரி உள்­ளிட்ட இத்­யாதி அம்­சங்­களை கூறி, ரசீது தராமல் நுகர்­வோரை ஏமாற்ற முடி­யாது. மருந்து நிறு­வ­னங்கள் நிர்­ண­யிக்கும் அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலை, மருந்து கட்­டுப்­பாட்டு கழ­கத்தின் கணினி, ‘சர்வர்’ மூலம் இணைக்­கப்­பட்­டி­ருக்கும் என்­பதால், விலை மாறு­தல்­களை உட­னுக்­குடன் அறிந்து, நட­வ­டிக்கை எடுக்க முடியும். நுகர்வோர் சுரண்­டப்­ப­டு­வ­தையும், போலி மருந்­து­களால் ஏமா­று­வ­தையும் தடுக்க, இத்­திட்டம் உதவும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மத்­திய அரசின் பரி­சீ­ல­னையில் உள்ள இத்­திட்­டத்­திற்கு துவக்க நிலை­யி­லேயே, மருந்து கடைக்­கா­ரர்கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர். ‘சிறிய நக­ரங்­களில் உள்ள சாதா­ரண மருந்து கடைக்­கா­ரர்கள், பார்­கோடு ரீடர் சாத­ன­மின்றி எப்­படி மருந்­து­களின் விலையை அறிந்து, விற்க முடியும். அப்­ப­டிப்­பட்ட நிலையில், மருந்­து­களை விற்­பனை செய்­யவே முடி­யாத நிலை ஏற்­படும்’ என, மருந்து விற்­ப­னை­யாளர் தரப்பு தெரி­விக்­கி­றது.
அச்சம்:நாட்டின் பல பகு­தி­களில் அடிக்­கடி மின்­தடை ஏற்­ப­டு­கி­றது. அது­போன்ற சம­யங்­களில், பார்­கோடை பயன்­ப­டுத்த முடி­யாமல், மருந்து விற்­பனை பாதிக்­கப்­படும் என்றும், மருந்து கடைக்­கா­ரர்கள் அச்­சப்­ப­டு­கின்­றனர். அவர்கள், இப்­பி­ரச்­னை­களை, மத்­திய அரசின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லவும் திட்­ட­மிட்­டுள்­ளனர். இது­கு­றித்து கணினி வல்­லுனர் ஒருவர் கூறு­கையில், ‘ஸ்மார்ட் போனில், ‘க்யூ ஆர்­கோடு ரீடர்’ அப்­ளி­கேஷன் மூலம் ஸ்கேன் செய்யும் வசதி, பர­வ­லாகி விட்ட சூழலில், அதை, மருந்­து­க­ளுக்கும் பயன்­ப­டுத்தி, பிரச்­னைக்கு தீர்வு காணலாம்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)