பதிவு செய்த நாள்
19 ஆக2016
06:05

ஐதராபாத் : தெலுங்கானா அரசு, மேதக் மாவட்டத்தில், பெண்களுக்கான தொழில் பூங்காவை அமைக்க உள்ளது.
தெலுங்கானா அரசு, ‘பிக்கி லேடிஸ் ஆர்கனைசேஷன்’ எனப்படும், எப்.எல்.ஓ., அமைப்புடன் இணைந்து, பெண்களின் தொழில் திறனை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, அம்மாநிலத்தில் உள்ள, மேதக் மாவட்டம், சுல்தான்பூர் என்ற இடத்தில், பெண்களுக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து, எப்.எல்.ஓ., அமைப்பின் தேசிய உறுப்பினர் ஜோட்ஸ்னா ஆங்கரா கூறியதாவது:தெலுங்கானா அரசின் தொழில் மற்றும் கட்டமைப்பு நிறுவனம், பெண்களுக்கான தொழில் பூங்கா அமைக்க, 1 ஏக்கர், 45 லட்சம் ரூபாய் என்ற விலையில், 50 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளது. இங்கு, பெண்கள் மட்டும் பங்கேற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பூங்கா அமைக்கப்படும். பெண்களுக்கு சுய தொழில் துவங்க பயிற்சியும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|