பதிவு செய்த நாள்
23 ஆக2016
04:51

பெங்களூரு : மத்திய பட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள, ஹனுமந்தராயப்பா, செய்தியாளர்களிடம் பேசியதாவது:பட்டு நெசவுத்துறையில் உள்ளோர், நீண்ட காலமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாட்டில் பட்டுப் புழு வளர்ப்பை ஊக்குவிக்கவும், பட்டுத் துறையை மேலும் வலுப்படுத்தவும், தேவையான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
நெசவாளர் துயர் தீர்ப்பு திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. கைத்தறி நெசவாளர்களை மேலும் ஊக்குவிக்க, 40 ஆண்டுகள் பழமையான கைத்தறி சட்டத்தை, மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம், பட்டுப் புழு வளர்ப்பு, பட்டு நெசவு உள்ளிட்ட துறைகள் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|