பதிவு செய்த நாள்
24 ஆக2016
00:06

புதுடில்லி : ஜியோமி நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில், 72 சதவீத வளர்ச்சி அடைந்து உள்ளது.
சீனாவை சேர்ந்த மொபைல் போன் நிறுவனமான ஜியோமி, குறைந்த விலையில், ‘ஸ்மார்ட்’ போன்களை விற்பனை செய்து வருகிறது. இதனால், பலரும், அந்த நிறுவனத்தின் போன்களை வாங்கி வருகின்றனர். ஜியோமி, ‘ரெட்மி நோட் 3’ என்ற மாடலில் மொபைல் போனை, கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இதுவரை, அந்த மாடலில், 17.50 லட்சம் மொமைல் போன்கள் விற்பனையாகி உள்ளன. இதுகுறித்து, ஜியோமி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மனு ஜெயின் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2014 ஜூலை மாதம், இந்திய மொபைல் சந்தையில் நுழைந்தது. தற்போது, உலகில், மொபைல் போன் அதிகம் விற்பனை ஆவதில், இந்தியா முக்கிய நாடாக உள்ளது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், எங்கள் நிறுவனம், 72 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|