பதிவு செய்த நாள்
27 ஆக2016
04:54

பெங்களூரு : டைட்டன் கம்பெனி, ‘ஸ்மார்ட் வாட்ச்’ விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள், ‘ஸ்மார்ட் வாட்ச்’களை அதிகளவில் அறிமுகம் செய்து வருகின்றன. உலகளவில், ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில், ஆப்பிள் நிறுவனம், 47 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, சாம்சங் நிறுவனம், 16 சதவீதம்; லெனோவா, 9 சதவீதம் என்றளவில் உள்ளன. இந்நிலையில், டைட்டன் நிறுவனமும், ‘ஜக்ஸ்ட்’ என்ற பெயரில் கடந்த ஜன., மாதம், ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்தது. இதுவரை, 10 ஆயிரம் வாட்ச்சுகள் விற்பனையாகி உள்ளன.
தற்போது, டைட்டன், ‘ஜக்ஸ்ட் புரோ’ என்ற பெயரில், புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 22 ஆயிரத்து, 995 ரூபாய். இதேபோல், பல மாடல்களில், ஸ்மார்ட் வாட்ச்சுகளை அறிமுகம் செய்து, வாட்ச் விற்பனையை அதிகரிக்க டைட்டன் முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|