பதிவு செய்த நாள்
01 செப்2016
23:28

புதுடில்லி : சீனாவைச் சேர்ந்த, பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான, லி எகோ நிறுவனம், 70 லட்சம் டாலர் முதலீட்டில், மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் தொழில் துவங்கும் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. அதன்படி, லி எகோ நிறுவனம், தைவான் நாட்டைச் சேர்ந்த காம்பல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, நொய்டாவில், மொபைல் போன், ‘அசெம்பிள்’ செய்யும் ஆலையை அமைக்க உள்ளது. இந்த ஆலையில், மாதந்தோறும், நான்கு லட்சம் மொபைல் போன்கள் அசெம்பிள் செய்ய, லி எகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, லி எகோ இந்தியா நிறுவன தலைமை அதிகாரி அதுல் ஜெயின் கூறுகையில், ‘‘நொய்டாவில் அமைய உள்ள தொழிற்சாலைக்காக, 70 லட்சம் டாலர் முதலீடு செய்யப்படும். அதில், 50 லட்சம் டாலர் ஆலைக்காகவும், 20 லட்சம் டாலர், மற்ற பணிகளுக்காகவும் செலவிடப்படும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|