பதிவு செய்த நாள்
01 செப்2016
23:29

புதுடில்லி : இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையில், சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறைகளில் அதிக வாய்ப்புள்ளதாக, அமெரிக்க நாட்டின் வர்த்தக துறை செயலர் பென்னி பிரிட்ஸ்கர் தெரிவித்தார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில், டில்லியில் நடந்த கருத்தரங்கில் பிரிட்ஸ்கர் பேசியதாவது: கடந்த, 2015ம் ஆண்டில், இந்தியாவில் இருந்து, 10 லட்சம் சுற்றுலா பயணிகள், அமெரிக்கா வந்துள்ளனர். இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளில், அமெரிக்கர்களின் பங்கு, 16 சதவீதம் என்றளவில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையில், சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறைகளில் அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதில், நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், ‘அடுத்த மூன்று ஆண்டுகளில், அமெரிக்காவில் இருந்து, 50 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க, இந்தியா இலக்கு நிர்ணயித்து உள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|