வாய்ப்புகளில் இருந்து விடுதலை!வாய்ப்புகளில் இருந்து விடுதலை! ... பண பரிவர்த்தனையில் புதுமை பண பரிவர்த்தனையில் புதுமை ...
வங்கி சேமிப்பு கணக்கு அறிய வேண்டியவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:35

வங்­கியில் புதி­தாக சேமிப்பு கணக்கு துவக்­கு­வ­தாக இருந்­தாலும் சரி, தற்­போது கணக்கு வைத்­துள்ள வங்கி சேவையில் அதி­ருப்தி அடைந்து வேறு வங்­கிக்கு மாறு­வ­தாக இருந்­தாலும் சரி, சேமிப்பு கணக்கை துவக்கும் முன், அடிப்­ப­டை­யாக சில விஷ­யங்­களை தெரிந்து கொள்­வது நல்­லது.
வங்­கிகள் பொது­வாக ஒரே வித­மான செயல்­பாட்டை கொண்­டி­ருந்­தாலும் அவை அளிக்கும் சேவைகள், வசூ­லிக்கும் கட்­ட­ணங்கள், அளிக்கும் சலு­கைகள் மாறு­ப­டலாம். இந்த அம்­சங்­களை எல்லாம் கவ­னத்தில் கொண்டு சேமிப்பு கணக்கை துவக்கும் வங்­கியை தேர்வு செய்­வது பொருத்­த­மாக இருக்கும்:
வட்டி விகிதம்: முதலில், சேமிப்பு கணக்கிற்கு வங்கி அளிக்கும் வட்டி விகிதம் என்ன என்­பதை அறிய வேண்டும். பெரும்­பா­லான வங்­கிகள், ஆண்­டுக்கு, 4 சத­வீத வட்டி வழங்­கு­கின்­றன. இதை­விட கூடு­த­லாக வட்டி அளிக்கும் வங்­கி­களும் உள்­ளன. கூடுதல் வட்டி தேவை எனில் இவற்றை நாடலாம்.
மினிமம் பாலன்ஸ்: வட்டி விகி­தத்­திற்கு அடுத்த படி­யாக அறிய வேண்­டிய விஷயம், சேமிப்பு கணக்கில் வைத்­தி­ருக்க வேண்­டிய குறைந்­த­பட்ச தொகையின் அளவு என்ன என்­பது. இது, ‘மினிமம் பாலன்ஸ்’ என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. பொது­வாக பொதுத்­துறை வங்­கி­களை விட தனியார் வங்­கி­களில் இந்த தொகை அதி­க­மாக இருக்­கலாம். ஸ்டேட் வங்கி, கனரா வங்கி போன்­றவை குறைந்­த­பட்சம், 1,000 ரூபாய் கணக்கில் வைத்­தி­ருக்க வேண்டும் என்­கின்­றன. எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., போன்ற வங்­கி­களில் இது, 5,000 முதல் 10,000 ஆக இருக்­கலாம். குறைந்தபட்ச தொகையை வைத்­தி­ருக்க விருப்­ப­மில்லை எனில் அடிப்­படை சேமிப்பு கணக்கு வச­தியை நாடலாம். ஆனால், இதில் அதிக வச­திகள் இருக்­காது. குறைந்தபட்ச தொகையை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, அந்த தொகையை வைத்­தி­ருக்க தவ­றினால் அப­ராதம் எவ்­வ­ளவு என்­ப­தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சேவையின் தரம்: வங்கி அளிக்கும் வாடிக்­கை­யாளர் சேவை பற்­றியும் விசா­ரித்து அறிய வேண்டும். பொது­வாக தனியார் வங்­கி­களின் சேவை சிறப்­பாக இருப்­ப­தாக கரு­தப்­பட்­டாலும், இப்­போது பொதுத்­துறை வங்­கி­களும் ஈடு­கொ­டுத்து வரு­கின்­றன. வங்கி அமைந்­தி­ருக்கும் இடம் வசிக்கும் வீடு அல்­லது பணி புரியும் அலு­வ­ல­கத்­திற்கு அரு­கா­மையில் இருப்­பதும் நல்­லது.
கட்­ட­ணங்கள்: வங்கி அளிக்கும் பல­வேறு சேவை­க­ளுக்­கான கட்­டண விகி­தங்­க­ளையும் அறிந்து கொள்ள வேண்டும். புதிய காசோலை புத்­தகம் வினி­யோ­கிக்க கட்­டணம் உண்டா, லாக்கர் வச­திக்­கான கட்­டணம் என்ன போன்ற விஷ­யங்­களை கவ­னிக்க வேண்டும்.
செய­லிகள்: வங்­கியின் இணைய சேவை, மொபைல் வங்கி வசதி போன்­றவை குறித்தும் அறிந்து கொள்­வது நல்­லது. வங்­கியின் செயலி குறித்தும் அறிந்து கொள்­வது நல்­லது. டிமெட் கணக்கு வசதி, காப்­பீடு, மியூச்­சுவல் பண்ட் ஆலோ­சனை போன்ற பிற சேவைகள் வழங்­கப்­ப­டு­கின்­ற­னவா என்றும் கேட்­ட­றிய வேண்டும். எல்­லா­வற்­றுக்கும் மேல், விண்­ணப்ப படி­வத்தில் பொடி எழுத்­துக்­களில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் விஷ­யங்­க­ளையும் மறக்­காமல் கவ­னித்து முடி­வெ­டுக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)