வங்கி சேமிப்பு கணக்கு அறிய வேண்டியவைவங்கி சேமிப்பு கணக்கு அறிய வேண்டியவை ... கிரெடிட் ரிப்போர்ட் பெறு­வது எப்­படி? கிரெடிட் ரிப்போர்ட் பெறு­வது எப்­படி? ...
பண பரிவர்த்தனையில் புதுமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:37

யு.பி.ஐ., மூலம், இந்­தியா ரொக்­க­மில்லா பரி­வர்த்­த­னையை நோக்கி வலு­வான அடியை எடுத்து வைத்­துள்­ளது. நேஷனல் பேமன்ட் கார்ப்­ப­ரேஷன் உரு­வாக்­கி­யுள்ள இந்த வசதி, ஸ்மார்ட்­போன்கள் மூலம், வங்கி பய­னா­ளிகள், வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்­பவும், பணம் பெறவும் வழி செய்­கி­றது. பணம் செலுத்­தவும் இதை பயன்­ப­டுத்­தலாம். முதல் கட்­ட­மாக, 21 வங்­கிகள் இதில் இணைந்­துள்­ளன. மேலும், பல வங்­கிகள் மற்றும் இ–காமர்ஸ் நிறு­வ­னங்கள் இணைய உள்­ளன.
என்ன சிறப்பு?ஏற்­க­னவே நெட் பேங்கிங் வசதி உள்­ளது. டிஜிட்டல் வாலெட்கள் பல உள்­ளன. இவைத்­த­விர என்.இ.எப்.டி., மற்றும் ஆர்.ஜி.டி.எஸ்., உள்­ளிட்ட வச­தி­களும் உள்­ளன. அப்­படி இருக்க, யு.பி.ஐ., வச­தியில் என்ன சிறப்பு என்று கேட்­கலாம். தற்­போ­துள்ள பண பரி­வர்த்­தனை சேவை­களை விட, யு.பி.ஐ., எளி­மை­யா­னது மற்றும் உட­னடி தன்மை கொண்­ட­தாக இருக்­கி­றது என்­பதே பதில். இதன் மூலம் உட­ன­டி­யாக வங்கி கணக்கில் இருந்து, வேறு ஒரு­வரின் வங்கி கணக்­கிற்கு பண பரி­வர்த்­தனை செய்­யலாம். மற்ற முறைகளில் இதற்கு அவ­காசம் தேவை. நெட் பேங்கிங் மூலம் பண அனுப்­பு­வது கொஞ்சம் சிக்­க­லா­னது. பய­னா­ளியின் விப­ரங்­களை உள்­ளீடு செய்ய வேண்டும். ஆனால், யு.பி.ஐ., மூலம், ஒரே கிளிக்கில் எளி­தாக பணம் அனுப்­பலாம்.
முக்­கிய அம்­சங்கள்* அதிக பட்­ச­மாக, ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்ப முடியும்* யு.பி.ஐ., 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்­களும் செயல்­ப­டக்­கூ­டி­யது. ஞாயி­றுக்­கி­ழ­மைகள், விடு­முறை நாட்­க­ளிலும் பயன்­ப­டுத்­தலாம் * எந்த வங்­கியில் கணக்கு இருந்­தாலும் இதை பயன்­படுத்த முடியும். இதில் இணைந்­துள்ள வங்­கியின் யு.பி.ஐ.,செய­லியை டவுண்­லோடு செய்து, அதில் தங்கள் வங்கி கணக்கை இணைத்­துக் ­கொள்­ளலாம்* இந்த வச­தியில் இணை­யா­த­வர்­க­ளுக்கும் வங்கி கணக்கு எண்ணை தெரி­வித்து பணம் அனுப்­பலாம்.
பாது­காப்பு!யு.பி.ஐ., வச­தியில் உள்ள முக்­கி­ய­மான அம்சம், இ–மெயில் முக­வரி போன்ற அடை­யா­ளத்தை உரு­வாக்கி கொண்டு பணம் அனுப்­பலாம். வங்கி கணக்கு உள்­ளிட்ட மற்ற எந்த விப­ரங்­க­ளையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விர்ச்­சுவல் பேமன்ட் அட்ரஸ் (வி.பி.ஏ.,) எனப்­படும் அடை­யாளம் மூலம் இந்த சேவையை பயன்­ப­டுத்­தலாம். பணப் ­ப­ரி­வர்த்­த­னையின் போது இதை மட்­டுமே குறிப்­பிட்டால் போதும் என்­பதால் மிகவும் பாது­காப்­பா­னது. கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு எண்ணை எல்லாம் தெரி­விக்கும் அவ­சியம் இல்லை. டிஜிட்டல் வாலெட்கள் போல டெபிட் கார்டில் இருந்து பணத்தை இதில் பதி­வேற்ற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இரண்டு அடுக்கு பாது­காப்பு அம்­சமும் கொண்­டுள்­ளது.
பயன்­ப­டுத்­து­வது எப்­படி?முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் அல்­லது வங்­கி­களின் இணை­ய­த­ளங்­களில் இருந்து யு.பி.ஐ., செய­லியை நிறு­விக்­கொள்ள வேண்டும். அதன் பிறகு, பதிவு செய்த மொபைல் எண்ணை குறிப்­பிட்டு, ஒரு முறை பாஸ்­வேர்டை பெற்று, 4 இலக்க, ‘பின்’ எண்ணை உரு­வாக்கி கொள்ள வேண்டும். அடுத்த கட்­ட­மாக, வி.பி.ஏ., எனும் விர்ச்­சுவல் பேமன்ட் அட்ரசை உரு­வாக்கி கொள்ள வேண்டும். இது உங்கள் பெய­ராக அல்­லது மொபைல் எண்­ணாக கூட இருக்­கலாம். இ–மெயில் முக­வரி போல அமை­யக்­கூ­டிய இதை கொண்டு தான் யு.பி.ஐ., வச­தியை பயன்­ப­டுத்­தலாம். அடுத்த கட்­ட­மாக, உங்கள் வங்கி கணக்­குடன் இணைத்­துக் ­கொள்­ளலாம். யு.பி.ஐ., செய­லியை திறந்து அதில் உள்ள பணம் அனுப்பும் மற்றும் பணம் பெறும் வச­தியை பயன்­ப­டுத்­திக் ­கொள்­ளலாம். பணம் வந்தால் எஸ்.எம்.எஸ்., போல செய்தி வரும். இதே போல பணம் அனுப்­பவும் கோரிக்கை அனுப்­பலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)