சில்­லரை விலை பண­வீக்கம் குறைந்­ததுசில்­லரை விலை பண­வீக்கம் குறைந்­தது ... தொழிற்­சாலை உப்பு தயா­ரிப்பில்   தர மேம்­பாட்டு தொழில்­நுட்பம் தொழிற்­சாலை உப்பு தயா­ரிப்பில் தர மேம்­பாட்டு தொழில்­நுட்பம் ...
மின்­னணு வணி­கத்தின் வளர்ச்சி சிறு வர்த்­த­கர்­களை பாதிக்­காது; பியுஷ் கோயல் உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2016
07:45

ஜெய்ப்பூர் : ‘‘மின்­னணு வணி­கத்தின் வளர்ச்சி, சிறிய அளவில் வியா­பாரம் செய்­வோரை பாதிக்­காது,’’ என,மத்­திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரி­வித்து உள்ளார்.
ராஜஸ்தான் தலை­நகர் ஜெய்ப்­பூரில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசி­ய­தா­வது: வலை­தளம் வாயி­லாக பொருட்­களை வாங்­கு­வது அதி­க­ரித்து வரு­கி­றது. இத்­த­கைய மின்­னணு வணிகம் பர­வ­லாகி வரு­வதால், சிறி­ய­ளவில் வியா­பாரம் செய்வோர் பாதிக்­கப்­ப­டுவர் என, சிலர் அச்சம் தெரி­விக்­கின்­றனர். அது தவறு. வரும் நாட்­களில், தெரு­முனை வியா­பா­ரமும், சிறிய கடை­களின் எண்­ணிக்­கையும் பெருகும். அதே­ச­மயம், ‘சூப்பர் மார்க்கெட்’ போன்ற பெரிய கடை­களின் எண்­ணிக்கை குறையும். அதனால், சிறிய வர்த்­த­கர்கள் பாதிக்­கப்­ப­டுவர் என்ற பேச்­சுக்கே இட­மில்லை. உதா­ர­ண­மாக, மின்­னணு வணி­கத்தில் உச்­ச­கட்ட வளர்ச்­சியை எட்­டி­யுள்ள அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பாவில், சிறிய கடைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன; பெரிய கடைகள் மூடப்­ப­டு­கின்­றன.
மின்­னணு வணிகம் மற்றும் சூப்பர் மார்கெட் போன்­ற­வற்றால், தங்கள் வர்த்­தகம் பாதிக்கும் என, சிறிய வியா­பா­ரிகள் கூட்­ட­மைப்பு கவலை தெரி­வித்­துள்­ளது. மின்­னணு வணி­கத்தால், சிறிய வியா­பா­ரிகள் தான் பய­ன­டைவர். தெரு­முனை வியா­பா­ரமும், சிறிய கடை­களும் தொடர்ந்து இயங்கும். இங்கு, பெரிய கடை­களை விட, மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும். சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய கடை­களில், பொருட்­க­ளுக்கு அதிகம் செல­வ­ழிக்க நேரும். வாகன நிறுத்தம், உணவு உள்­ளிட்­ட­வற்­றுக்கு கூடு­த­லாக செல­வாகும். ஆகவே, மின்­னணு வணி­கத்தால், சிறிய வர்த்­த­கர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது.
நாடு சுதந்­திரம் பெற்று, 70 ஆண்­டு­க­ளா­கியும், இன்னும், 20 – 22 கோடி மக்­க­ளுக்கு மின் வசதி கிடைக்­காத நிலை உள்­ளது. இந்­திய குடும்­பங்கள் ஒவ்­வொன்றும், மின் வசதி பெற வேண்டும் என்ற இலக்­குடன், மத்­திய அரசு செயல்­பட்டு வரு­கி­றது. வரும் ஆண்­டு­களில், நிலக்­கரி ஏலம் மூலம், கிழக்கு மாநி­லங்­க­ளுக்கு, 3.25 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இத்­தொகை, பொது­மக்கள் நல்­வாழ்­விற்கும், பொது சேவை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தப்­படும்.
சமூக சேவைக்­கான வழி­களில், அர­சி­யலும் ஒன்று. ஆனால், நல்­ல­வர்கள் அர­சி­ய­லுக்கு வரு­வ­தில்லை; அர­சியல் குறித்த சமூக கண்­ணோட்டம் மாற வேண்டும். கோடிக் கணக்­கான மாண­வர்­க­ளுக்கு, நல்ல கல்வி கிடைப்­ப­தில்லை; அப்­ப­டியே கிடைத்­தாலும், அவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டு, பண்ணை வேலை­க­ளுக்கு செல்­கின்­றனர். இது போன்ற நிலையை தவிர்க்க, மக்கள் சமூகம் தீவிர அர­சி­யலில் பங்­கேற்று, ஒட்­டு­மொத்த சமு­தாய வளர்ச்­சிக்கு உதவ வேண்டும்; அதற்­கான ஆற்­றலும், நேர்­மையும், சமூ­கத்­திடம் உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)