வேளாண் துறை வளர்ச்­சிக்கு சர்­வ­தேச கூட்­ட­மைப்பு வேளாண் துறை வளர்ச்­சிக்கு சர்­வ­தேச கூட்­ட­மைப்பு ... ஊழி­யர்­க­ளுக்கு பயிற்சி மையம் மெர்­சிடஸ் நிறு­வனம் துவக்­கி­யது ஊழி­யர்­க­ளுக்கு பயிற்சி மையம் மெர்­சிடஸ் நிறு­வனம் துவக்­கி­யது ...
புத்­துயிர் பெறு­கி­றது சிமென்ட் துறை ; தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் வருவாய் ‘சூப்பர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2016
07:26

பிராங்பர்ட் : ‘கடந்த சில ஆண்­டு­க­ளாக, மந்த கதியில் இருந்த இந்­திய சிமென்ட் துறை, பரு­வ­மழை பொழிவு, தேவை அதி­க­ரிப்பு போன்­ற­வற்றால், புத்­துயிர் பெறத் துவங்­கி­யுள்­ளது. இதனால், சிமென்ட் நிறு­வ­னங்­களின் லாப வரம்பு உயர்ந்து வரு­கி­றது’ என, ஜெர்­ம­னியைச் சேர்ந்த டைய்சு பாங்க் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்: இந்­திய சிமென்ட் துறை, கடந்த சில ஆண்­டு­க­ளாக மந்த கதியில் இருந்து வந்­தது. தொடர்ந்து இரண்டு ஆண்­டு­க­ளாக நில­விய வறட்சி, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மலிவு விலை சிமென்ட் இறக்­கு­மதி, அரசு திட்­டங்­களில் தேக்கம், கட்­டு­மான துறையில் ஏற்­பட்­டி­ருந்த தொய்வு போன்­ற­வற்றால், சிமென்ட் நிறு­வ­னங்­களின் வருவாய் சரி­வ­டைந்­தது. இந்­நி­லையில், இந்­தாண்டு, ஜூன் முதல் செப்., 11 வரை­யி­லான காலத்தில், நாடு முழு­வதும், 95 சத­வீத அள­விற்கு பரு­வ­மழை பெய்­துள்­ளதால், சிமென்ட் தேவை, 2 – 4 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது; இது, அடுத்த ஆறு மாதங்­களில், 9 சத­வீதம் வளர்ச்சி காணும்.
இரண்­டா­வ­தாக, நாடு முழு­வதும் சாலைப் பணிகள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­வதும், சிமென்ட் தேவையை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது. அதே­ச­மயம், மஹா­ராஷ்­டிரா, ஆந்­திரா, தெலுங்­கானா மாநி­லங்கள் தவிர்த்து, பெரும்­பான்­மை­யான பிராந்­தி­யங்­களில், சிமென்ட் விலையின் ஏற்ற, இறக்கம், 2 – 4 சத­வீத அள­விற்கு கட்­டுக்குள் உள்­ளது. சமீபகால­மாக, சிமென்ட் துறையில், புதிய நிறு­வ­னங்கள் எதுவும் கள­மி­றங்­க­வில்லை. செயல்­பட்டு வரும் நிறு­வ­னங்­களும், சிமென்ட் உற்­பத்தி திறனை, குறைந்த அள­விற்கே உயர்த்­தி­யுள்­ளன. இது, சிமென்ட் தேவைக்கும், அளிப்­பிற்கும் உள்ள இடை­வெ­ளியை குறைத்து, சிமென்ட் நிறு­வ­னங்­களின் லாப வரம்பை உயர்த்த உதவி புரிந்து வரு­கி­றது.
பரு­வ­மழை காலம் முடிந்த பின், சிமென்­டிற்­கான தேவை மேலும் அதி­க­ரிக்கும். குறிப்­பாக, அடுத்த அரை­யாண்டில், கிரா­மப்­பு­றங்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நக­ரங்­களில், குடி­யி­ருப்பு கட்­டு­மான பணிகள் சூடு­பி­டிக்கும். அப்­போது, சிமென்­டிற்­கான தேவை அதி­க­ரிக்கும் என்­பதால், விலை உயர்வும், தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் வரு­வாயும் பெருக வாய்ப்­புள்­ளது. இந்த மதிப்­பீட்டின் அடிப்­ப­டையில், முத­லீட்­டா­ளர்கள், சிமென்ட் நிறு­வன பங்­கு­களை அதிக அளவில் வாங்கி வரு­கின்­றனர். குறிப்­பாக, இந்­தியா சிமென்ட்ஸ், அம்­புஜா சிமென்ட்ஸ், ஏ.சி.சி., அல்ட்ரா டெக் சிமென்ட் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்­குகள் விலை, 1 – 4 சத­வீதம் வரை உயர்ந்­துள்­ளது. நடப்பு நிதி­யாண்டில், சிமென்­டிற்­கான தேவை, 7 சத­வீதம் வளர்ச்சி காணும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)