பதிவு செய்த நாள்
18 செப்2016
01:29

ஐதராபாத்:கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், தேசிய அளவில் தொழில் துறையில் குவிந்த முதலீடுகள் குறித்த அறிக்கையை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம், 9 சதவீத வளர்ச்சியுடன், நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி, 2014 – 15ம் நிதியாண்டில், 2.4 சதவீதம் என்ற அளவிற்கு மிகக் குறைவாகவே இருந்தது.
கடந்த நிதியாண்டில், தேசிய அளவில், தொழில்துறை, 1,38,700 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதில், 21,914 கோடி ரூபாய் முதலீட்டுடன், ஆந்திரா முதலிடத்தை பிடித்துள்ளது. இம்மாநிலம், மொத்த முதலீட்டில், 15.8 சதவீதத்தை ஈர்த்துள்ளது. தொழில் முதலீட்டில், இரண்டாவது இடத்தை, குஜராத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.மஹாராஷ்டிரா, முதலிடத்தில் இருந்து, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள், ஐந்தாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|