பதிவு செய்த நாள்
18 செப்2016
01:34

பெங்களூரு:அமேசான் நிறுவனம், பொருட்களை உடனுக்குடன்,‘டெலிவரி’ செய்ய, கூடுதலாக, 10 ஆயிரம் ஸ்டோர்களை சேர்க்க உள்ளது. தற்போது 2,500 ஸ்டோர்களில் இருந்து, பொருட்களை டெலிவரி செய்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, அமேசான், ‘ஐ ஹேவ் ஸ்பேஸ்’ என்ற புதிய திட்டத்தை துவக்கியுள்ளது. அதன்படி, உள்ளூர் ஸ்டோர்களுடன் ஒப்பந்தம் செய்து, அவற்றிலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை உடனுக்குடன் டெலிவரி செய்ய உள்ளது. இதற்காக, கூடுதலாக, 10 ஆயிரம் ஸ்டோர்களை சேர்க்க திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து,
டெலிவரி செய்யும் ஸ்டோர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 500 ஆக அதிகரிக்கும். இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பண்டிகை காலத்தை முன்னிட்டு, டெலிவரி மையங்களின் எண்ணிக்கை, ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|