பதிவு செய்த நாள்
20 செப்2016
05:03

பெங்களூரு : சீனாவின் அலிபாபா குழுமம், வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இக்குழுமத்தின் இந்திய பிரிவு, 2007 முதல், பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. வலைதளத்தில், வணிகர்களுக்கு மொத்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வரும் இப்பிரிவு, தற்போது, வர்த்தக வசதி மையம் என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டத்தில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், அலிபாபா வலைதளம் வாயிலாக, வெளிநாடுகளுக்கு சுலபமாக, பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
இதற்காக, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனை, கடனுதவி, சப்ளை வசதி உள்ளிட்டவற்றுக்கு, கோட்டக் மகிந்திரா பேங்க், ஐ.டி.எப்.சி., பேங்க், டி.எச்.எல்., ஆதித்ய பிர்லா பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன், அலிபாபா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம், இந்தியா சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த, அலிபாபா டாட் காம் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|