பதிவு செய்த நாள்
01 அக்2016
04:45

புதுடில்லி:அண்மையில், புதுடில்லியில், கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு, உச்சி மாநாடு ஒன்றை நடத்தியது. இந்த மாநாட்டில், ரெப்கோ வங்கிக்கு, இரண்டு விருதுகள் கிடைத்தன.சிறந்த வாராக்கடன் நிர்வாகம் மற்றும் சிறந்த இளம் வயது ஊழியர் செயல்திட்டம் என, இரண்டு விருதுகள், ரெப்கோ வங்கிக்கு கிடைத்துள்ளன.
இதுகுறித்து, ரெப்கோ வங்கியின் செயல் இயக்குனர், ஆர்.எஸ்.இஸபெல்லா கூறியதாவது:கடந்த, 1969ல், பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய, மக்களின் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்ட இவ்வங்கி, பின், கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது இவ்வங்கியின் மொத்த வர்த்தகம், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 13,084 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து, 9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.பல விருதுகளை பெறும் அளவுக்கு இவ்வங்கி, சிறந்த அமைப்பு முறைகள், செயல்முறைகள், கொள்கைகளை கொண்டு நவீன முறையில் இயங்கி வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|