பதிவு செய்த நாள்
01 அக்2016
04:46

ஐதராபாத்:‘‘வலைதளத்தில், பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிச்சயம் வெற்றி பெறும்,’’ என, இன்போசிஸ் நிறுவனர்களுள் ஒருவரான, நந்தன் நிலேகனி தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:வலைதளத்தில், பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில், மிகப்பெரிய அளவிற்கு வர்த்தக வாய்ப்பு உள்ளது. வரும் தீபாவளி பண்டிகை, வலைதளத்தில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு, மிகச்சிறந்த வருவாயை வழங்கும்.
நன்மதிப்பு:இத்துறை நிறுவனங்களின் வர்த்தக நடைமுறைகளில், ஒழுக்கம் அதிகரித்துள்ளது. அவை,செலவை குறைத்து, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை சம்பாதிக்க துவங்கிஉள்ளன; அந்நிறுவனங்களின் நிதியாதாரம் வலுவாக உள்ளது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு தேவையான நிதியும் உள்ளதால், அவை, வர்த்தகத்தில் ஒழுங்குமுறையை முழுமையாக கொண்டு வந்துவிடும். இந்நிறுவனங்கள், சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவற்றின் வளர்ச்சி தொடரும்.
பரிவர்த்தனை:இந்தியாவில், இது போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய, மின்னணு வர்த்தகத்தில், ஆண்டுக்கு, 1,000 – 1,500 கோடி டாலர் அளவிற்கே, தற்போது பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இது, அடுத்த, 4 – 5 ஆண்டுகளில், 6,000 – 10,000 கோடி டாலராக வளர்ச்சி காணும். அதனால், இத்துறை நிறுவனங்களுக்கு வெற்றி நிச்சயம் எனலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|