பதிவு செய்த நாள்
06 அக்2016
07:27

புதுடில்லி : லெனோவோ நிறுவனம், இந்தியாவில், ‘லேப் – டாப்’ தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, லெனோவோ இந்தியாவின் இயக்குனர் தினேஷ் நாயர் கூறியதாவது:கடந்த, 2015ல், எங்கள் நிறுவனத்தின் தலைவர், யாங் யுவாங்குயிங், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதன் விளைவாக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், சென்னையில், தொழிற்சாலை அமைத்தோம். தற்போது, அந்த ஆலையில் உற்பத்தி துவங்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஆலையில், ஏற்கனவே, கணினி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு, லேப் – டாப் தயாரிக்கும் வகையில், ஆலையின் திறனை உயர்த்த உள்ளோம். இந்தியாவில், கணினி விற்பனையில், லெனோவோ, மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. தற்போது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், லேப் – டாப், இந்தியாவில் விற்கப்படுகிறது. விரைவில், இந்தியாவிலேயே, லேப் – டாப் தயாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|