பதிவு செய்த நாள்
06 அக்2016
07:30

லண்டன் : பிரிட்டனில், ஜூன் 23ல் நடைபெற்ற பொது ஓட்டெடுப்பில், அந்நாடு, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக, பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, அமெரிக்க டாலருக்கு நிகரான, பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு, 31 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்தது.அதன்பின், நிதிச் சந்தை ஊக்குவிப்பு திட்டத்தால், பவுண்ட் மதிப்பு உயர்ந்தது. எனினும், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதில், நிச்சயமற்ற நிலை நீடித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ‘பிரிட்டன் விலகுவது தொடர்பான சட்டம், 2017 மார்ச்சுக்குள், பார்லி.,யில் நிறைவேற்றப்படும்’ என, அறிவித்தார். இதனால், நேற்று, பவுண்ட் மதிப்பு, 31 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ந்தது; முதன் முறையாக, ஒரு பவுண்டுக்கு, 1.26 டாலராக குறைந்தது. அதுபோல, யூரோவுக்கு எதிரான பவுண்ட் மதிப்பும், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|