பதிவு செய்த நாள்
06 அக்2016
07:30

புதுடில்லி : ‘பாரம்பரிய தொழில்களில், இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில், குறிப்பிடத்தக்க அளவிற்கு, வேலைவாய்ப்பு பறிபோகும்’ என, உலக வங்கி எச்சரித்துள்ளது.
தொழில்நுட்ப பயன்பாடுஇவ்வங்கி, இயந்திரமயமாகி வரும் நாடுகளில் ஏற்படும், வேலை இழப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதுகுறித்து, உலக வங்கி தலைவர், ஜிம் கிம் கூறியதாவது: வளரும் நாடுகள், பாரம்பரிய பொருளாதார பாதையில் நடைபோட்டு வருகின்றன. இந்த நடைமுறையை அடியோடு மாற்றும் விதமாக, தொழில்நுட்ப பயன்பாடு பெருகி வருகிறது. மனிதர்கள் செய்து வரும் பல வேலைகளை, இன்று இயந்திரங்கள் செய்கின்றன. அவற்றின் பயன்பாடு, நாளடைவில் பரவலாகும் போது, மனித உழைப்பு சார்ந்த வேலைகள் பறிபோகும். இந்த வகையில் இந்தியாவில், 69 சதவீதம்; சீனாவில், 77 சதவீத வேலை இழப்புகள் ஏற்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆகவே, வளரும் நாடுகள், அவற்றின் வளர்ச்சிக்காக, அடிப்படை கட்டமைப்பு துறையில், அதிக முதலீடுகளை ஊக்குவிக்கும் போது, எதிர்காலத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி களையும், கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.தொழில்நுட்பம் தான், இதுவரை உலகை மாற்றி வந்துள்ளது; இனியும் மாற்றும் என்பதை நாம் அறிவோம்.
மாற்றம்அதற்கேற்ப, வளரும் நாடுகள் அனைத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது சாத்தியமில்லாதது. குறிப்பாக, ஆப்ரிக்காவின் பெரும்பாலான நாடுகளில், பாரம்பரிய நடைமுறையை தகர்க்கக் கூடியதாக, தொழில்நுட்பம் உருவெடுத்து வருகிறது. இதன் காரணமாக, எத்தியோப்பியாவில் மட்டும், 85 சதவீத வேலைவாய்ப்புகள் பறிபோகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|