பதிவு செய்த நாள்
07 அக்2016
07:26

புதுடில்லி : பஜாஜ் நிறுவனம், எல்.இ.டி., பிரிவின் மூலம், 50 சதவீத வருவாயை ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், பல்புகள், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதன தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், எல்.இ.டி.,யை அடிப்படையாக கொண்ட பொருட்களின் விற்பனையின் மூலம், 50 சதவீத வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, பஜாஜ் எலக்ட்ரிக்கல்சின் தலைவர், ஷேகர் பஜாஜ் கூறியதாவது: கடந்த நிதியாண்டில், எங்கள் நிறுவனத்தின் மொத்த விற்பனை, 1,100 கோடி ரூபாயாக இருந்தது. இதில், எல்.இ.டி., பங்களிப்பு, 300 கோடி ரூபாய். நடப்பாண்டில், 1,300 கோடிக்கு விற்பனை இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதில், எல்.இ.டி., பங்கு, 450 கோடி ரூபாய் – 500 கோடி ரூபாய் இருக்கும். இதனால், அடுத்த நிதியாண்டில், எல்.இ.டி., பிரிவின் மூலம், 50 சதவீத வருவாய் ஈட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|