பதிவு செய்த நாள்
10 அக்2016
04:35

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்., தெரிவித்துள்ளது.
ஐ.எம்.எப்., அமைப்பு ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வரவேற்க தக்கது என்றும், ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம் அமலுக்கு வருவது இந்தியாவின் நடுத்தர கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகள் வர்த்தகத்தை ஊக்குவித்து, உள்ளூர் சந்தையை வளர்க்கும் என்பதை இந்தியா உணர்த்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, இந்தியாவின் ஜி.டி.பி., 7.6 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டும் இதே அளவு வளர்ச்சி தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நுகர்வு இந்தியாவின் வளர்ச்சி மீட்சிக்கு காரணமாக இருப்பதாகவும், பருவமழை மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆகிய அம்சங்களும் வளர்ச்சிக்கு உதவும் என அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா மற்றும் இதோனேஷியா போன்ற நாடுகளில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை அதிகரித்து வருவதும் வளர்ச்சிக்கு உதவும் அம்சமாக இருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|