பதிவு செய்த நாள்
10 அக்2016
04:37

நிதி அறிவை பெறுவது வாழ்க்கையை மாற்றக்கூடியதாக அமையும் என்கிறார் ஜேசன் வைடக். இதுவே நிதிப்பாதையில் முன்னேற்றத்தை கொடுக்கும் என்று வலியுறுத்துபவர், ‘யு ஒன்லி லிவ் ஒன்ஸ்’ புத்தகத்தில் நிதிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்: நிதி விஷயங்களை கற்றுத்தேர்வது என்பது முக்கியமான வாழ்க்கைத்திறனாகும். இது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. பணத்தை கையாள்வதில் உங்களுக்கு எவ்வளவு திறன் இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கையை பாதிக்க கூடிய நிதி தவறுகளை நீங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. நிதிக் கல்வி பணத்தை மேலும் சிறப்பாக நிர்வகிக்க உதவி, மேலும் அதிகமாக சேமித்து, புத்திசாலித்தனமான முறையில் செலவிட வழி செய்கிறது. மேலும், சரியான நிதி முடிவுகளை மேற்கொள்வதற்கான தகவல்கள் மற்றும் திறனை அளிக்கிறது.
நிதிக் கல்வி பணம் எப்படி செயல்படுகிறது, அதை எப்படி சம்பாதிக்கலாம், அது எப்படி நிர்வகிக்கப்படுகிறது மற்றும் எப்படி முதலீடு செய்யப்படுகிறது என புரிய வைப்பதாகும். நிதி விஷயங்கள், கடன் ஆகியவற்றை புரிய வைத்து, இந்த புரிதலை கொண்டு எப்படி தகவல் அடிப்படையிலான முடிவுகளை எடுப்பது என்றும் நிதிக் கல்வி வழிகாட்டும். நிதி கல்வியை முக்கியமாக நினைப்பதற்கான முக்கிய அம்சங்கள் சில: ஓய்வு கால திட்டமிடல் நம் பொறுப்பில் தான் இருக்கிறது. செலவுகள் அதிகரிக்கும் நிலையில் வருவாய் அதற்கேற்ப அதிகரிக்காமல் இருக்கலாம் என்பதால், வருவாய்க்குள் செலவை கட்டுப்படுத்துவது முக்கியம். இன்று வாய்ப்புகளும், நிதி சாதனங் களும் அதிகரித்துள்ளன. இவை மட்டும் அல்லாமல், நிதிக் கல்வி சரியான நிதி முடிவுகளை எடுக்கும் ஆற்றலை வளர்க்கும்.
நிதிக் கல்வி பெற்றிருப்பது என்பது ஆற்ற லாகும். இது உங்களுக்கு செல்வாக்கை அளிக்கும். உங்கள் விழிப்புணர்வு மற்றும் அதன் பயன்பாடு வாழ்க்கையையே மாற்றக்கூடியதாக இருக்கும். எல்லோருக்கும் ஒரு பண மனநிலை உள்ளது. உங்கள் தற்போதைய நிதி நிலைக்கு இந்த மனநிலை தான் காரணம் என்பதை பலரும் உணர்வதில்லை. பணம் பற்றி எப்படி யோசிக்கிறீர்கள் என்பது பண மனநிலையை உருவாக்குகிறது. இது நீங்கள் பணத்தை நிர்வகிக்கும் விதத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. உங்கள் பண மன நிலை முதலில் உங்கள் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்டு, அதன் பிறகு சுற்றி இருப்பவர்கள் மற்றும் ஊடகங்களால் வளர்க்கப்படுவதாக இருக்கிறது.
நம்முடைய உணர்வுகளை பணத்தில் இருந்து பிரிக்க முடியாது. எனவே, நம்முடைய நிதி முடிவுகளை உணர்வுகள் எப்படி பாதிக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். நிதி விழிப்புணர்வு மூலம் நம்முடைய பண மனநிலையை மாற்றிக்கொள்ளலாம். பணத்துடனான உங்கள் உறவு என்ன... செலவு பழக்கம் எப்படி வாழ்க்கையில் தாக்கம் செலுத்து கிறது... நேரத்தை எப்படி செலவிடுகிறோம்... ஆகிய கேள்விகளை கேட்டுக்கொள்வதன் மூலம் உங்கள் பண மனநிலையை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த புரிதல் உங்கள் பண மன நிலையை மாற்றிக்கொள்ளவும் உதவும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|