பதிவு செய்த நாள்
10 அக்2016
04:44

ஆமதாபாத் : ரா பிரெஸரி நிறுவனம், காய்கறி, பழக் கழிவுகளில் இருந்து, சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த ரா பிரெஸரி, பழச்சாறு விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந் நிறுவனம், மாதம்தோறும், ஒரு லட்சம் பழச்சாறு பாட்டில்களை விற்பனை செய்கிறது. பழச்சாறு தயாரிக்கும் போது, கிடைக்கும் கழிவு பொருட்களை வீணாக்காமல் அவற்றில் இருந்து வேறு சில உணவு பொருட்களை தயாரிக்கும் முடிவிற்கு இந்நிறுவனம் வந்துள்ளது. குறிப்பாக, பழ, காய்கறி கழிவு பொருட்களில் இருந்து, சிப்ஸ் உள்ளிட்ட உப பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், மாதம்தோறும், 100 டன் அளவுக்கு பழம் மற்றும் காய்கறி குப்பைகளை அகற்றுகிறோம். தற்போது, அந்த கழிவு பொருட்களை கொண்டு சிப்ஸ் உள்ளிட்டவற்றை தயாரிக்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|