பதிவு செய்த நாள்
10 அக்2016
04:46

ஐதராபாத் : நைகா நிறுவனம், நடப்பாண்டில், 350 கோடி ரூபாய் மதிப்புக்கு வியாபாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம், நைகா. இந்த நிறுவனத்துக்கு, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, டில்லி ஆகிய இடங்களில் ஸ்டோர்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில், இந் நிறுவனத்தின் மொத்த வியாபாரம், 80 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இதை, நடப்பு நிதியாண்டில், 350 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.
இதுகுறித்து, நைகா நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் அழகு சாதன பொருட்கள் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. வரும், 2020ம் ஆண்டில், இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் துறையின் சந்தை மதிப்பு, 1,800 கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எங்கள் நிறுவனம், 2020ம் ஆண்டில், நாடு முழுவதும், 30 ஸ்டோர்கள் துவக்க முடிவு செய்துள்ளது. மேலும், புதிதாக, 20 பிராண்டுகளை சேர்க்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|