பதிவு செய்த நாள்
24 அக்2016
23:09

புதுடில்லி : மத்திய அரசின், ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தினால், பூட்டு விற்பனை அமோகமாக இருக்கும் என, கோத்ரெஜ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
கோத்ரெஜ் லாக்கிங் நிறுவனம், பூட்டு தயாரிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு பெட்டக தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டில், பூட்டு விற்பனை சந்தை மதிப்பு, 4,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. அதில், கோத்ரெஜ் பங்களிப்பு, 35 – 40 சதவீதம் என்றளவில் உள்ளது. இந்நிறுவனம், மத்திய அரசின், ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் பூட்டு விற்பனை அமோகமாக இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் துணை தலைவர் ஷியாம் மோத்வானி கூறியதாவது:மத்திய அரசின், அனைவருக்கும் வீடு, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களால், பூட்டுக்களுக்கு தேவை அதிகரிக்கும். எங்கள் நிறுவனம், லத்தீன் அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய புதிய சந்தைகளுக்கும், பூட்டுகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|