பதிவு செய்த நாள்
02 நவ2016
02:44

புதுடில்லி : உள்நாட்டில், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், ஆயுள் சாரா, பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டில், கடந்த செப்., மாதத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல், 86.20 சதவீதம் உயர்ந்து, 14,950 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 8,030 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த பிரீமியம் வசூலில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு, 9,164 கோடி ரூபாய்; தனியார் நிறுவனங்களின் பங்கு, 5,786 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
ஏப்., – செப்., வரையிலான காலத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல், 28.33 சதவீதம் உயர்ந்து, 60,271 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு, 32,869 கோடி ரூபாய்; தனியார் நிறுவனங்களின் பங்கு, 27,402 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|