பதிவு செய்த நாள்
22 நவ2016
05:39

புதுடில்லி : மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.5 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதனடிப்படையிலும், பல நிறுவன திட்டங்கள் முடிவடைந்து உள்ளதாலும், அடுத்த, 12 – 18 மாதங்களில், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம், 6 – 12 சதவீதமாக வளர்ச்சி காணும்.
அதே சமயம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆறு சதவீதத்திற்கும் குறைவாக சரிந்தாலோ அல்லது விளை பொருட்கள் விலை வீழ்ச்சி கண்டாலோ, லாப வளர்ச்சி குறையும். வட்டி விகிதம், பணவீக்கம் ஆகியவை அதிகரித்தாலும், நிறுவனங்களின் லாப வளர்ச்சி சரிவடையும். அதிகரித்து வரும் போட்டியால், தொலை தொடர்பு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. அது போல, சில துறைகளில், நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் விரிவாக்கத் திட்டங்கள் காரணமாகவும், அவற்றின் லாப வளர்ச்சி குறையக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|