பதிவு செய்த நாள்
22 நவ2016
05:40

சென்னை : ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 70 லட்சமாவது காரை தயாரித்துள்ளது.
சென்னை அருகே, ஸ்ரீபெரும் புதுாரில் உள்ள தொழிற்சாலையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஒய்.கே.கூ மற்றும் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கணேஷ் மணி ஆகியோர், ‘க்ரெட்டா ஏ.டி.,’ மாடலில் தயாரிக்கப்பட்ட, 70 லட்சமாவது காரை அறிமுகப்படுத்தினர்.
இதையடுத்து, ஒய்.கே.கூ பேசியதாவது: புதிய தொழில்நுட்பத்தில், தரமான கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறோம். கடந்த, 1998ல், சென்னையில் கார் உற்பத்தியை துவக்கி, 18 ஆண்டுகளில், 70 லட்சம் கார்களை தயாரித்துள்ளோம்.குறுகிய காலத்தில், இச்சாதனை புரிய உதவிய ஊழியர்கள், முகவர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கும், வெற்றிக்கு துணை நின்ற தமிழக அரசுக்கும் நன்றி.
நிறுவனம், ‘இயான், ஐ 10, வெர்னா’ உள்ளிட்ட, 10 மாடல்களில் கார்களை சந்தைப்படுத்தி வருகிறது. பயணிகள் கார் ஏற்றுமதியில், தொடர்ந்து, 12 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது; உள்நாட்டில், கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. வரும், 2021ம் ஆண்டின் முற்பாதியில், கார் தயாரிப்பு ஒரு கோடியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|