பதிவு செய்த நாள்
26 நவ2016
10:13

புதுடில்லி : சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள், அங்கு கட்டணம் செலுத்துவதற்காக, நின்று செல்வதை தவிர்க்கும் வகையில், வாகனங்களில் நவீன கருவி பொருத்தப்பட உள்ளது.
இதுபற்றிய தெளிவான அறிவிப்புக்காக, தமிழக வாகன உற்பத்தி நிறுவனங்கள் காத்திருக்கின்றன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், வாகனக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுங்கச் சாவடி களில், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இனி கார் உள்ளிட்ட வாகனங்களில், ஆர்.எப்.ஐ.டி., என்ற, 'ரேடியோ பிரீகுவென்சி ஐடென்டிபிகேஷன்' கருவியை, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்த வேண்டும்.
அதாவது, இனி புதிதாக தயாராகும் வாகனங்களில், கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். அந்த கருவி பொருத்தி இருந்தால், முன்கூட்டியே செய்யப்பட்டிருக்கும் வசதிகள் மூலமாக, சுங்கச் சாவடிகளை வாகனம் கடக்கும் போது, கட்டணம் தானாக கழிந்து விடும். எனினும், இது எப்படி செயல்படும்; என்ன வகையான தொழில்நுட்பம் போன்ற முழு தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அதற்காக, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இதுகுறித்து, சென்னையில் உள்ள, 'போர்டு' வாகன ஆலையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'அதுபோன்ற உத்தரவு வந்துள்ளது. ஆனால், அது எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை கள் கூறப்படவில்லை.
'அதேபோல், எப்போது அமலுக்கு வரும் என்ற தகவலும் இல்லை. அதிகாரப்பூர்வ தகவல் வந்த பிறகே, அது பற்றி கருத்து தெரிவிக்க முடியும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|