பதிவு செய்த நாள்
26 நவ2016
15:22

மும்பை : பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு முதலில் அறிவித்திருந்தது. பின்னர் மக்களின் வசதிக்காக டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பிக் பஜாரில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்த சேவை மல்டிபிளக்ஸ் ஐநாக்ஸ் தியேட்டர்களிலும் துவக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ.,யுடன் இணைந்து இந்த சேவையை பிக் பஜார் மற்றும் ஐநாக்ஸ் தியேட்டர்கள் வழங்க உள்ளன. ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்து, பணம் பெற்றுக் கொள்ள வங்கி கிளைகள் மற்றும் தபால் நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது. மக்களின் சிரமங்களை குறைப்பதற்காகவும், கூட்ட நெரிசலை தடுப்பதற்காகவும் எஸ்பிஐ இவ்விரு நிறுவனங்களுடன் இணைந்து மக்கள் சிரமமின்றி பணம் பெற்றுச் செல்ல வசதி செய்துள்ளது.
நேற்று மாலை மும்பையில் உள்ள 3 ஐநாக்ஸ் தியேட்டர்களில் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. நவம்பர் 27 ம் தேதி முதல் மும்பையில் உள்ள அனைத்து ஐநாக்ஸ் தியேட்டர்களும் இந்த சேவையை துவக்க உள்ளன. விடுமுறை மட்டுமி்ன்றி வேலை நாட்களிலும் பணம் வழங்க உள்ளதாக பிக் பஜார் தெரிவித்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் பணம் எடுப்பதற்காக எந்த பொருளையும் வாங்க வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்துவதில்லை என பிக் பஜார் நிர்வாகி தெரிவித்துள்ளார். டெபிட் கார்டுகளை பயன்படுத்தி நாள் ஒன்றிற்கு ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|