பதிவு செய்த நாள்
04 டிச2016
05:13
புதுடில்லி:வணிக முத்திரை உடைய தங்க நாணயங்கள், அதாவது, பிராண்டட் நாணயங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த, 1 சதவீத கலால் வரியை, மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம், ரத்து செய்து உள்ளது. உள்நாட்டில், 2011ல் இருந்து, வணிக முத்திரை உடைய, தங்க நாணயங்கள் மீது, 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வரியை, தற்போது ரத்து செய்வதாக, மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்து உள்ளது.சுங்க வரி அல்லது கலால் வரி செலுத்தப்பட்ட தங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட, 99.5 சதவீதம் அல்லது அதற்கு மேல் தரமான தங்க நாணயங்களுக்கு மட்டும், இந்த வரிச்சலுகை வழங்கப்பட உள்ளது. பொற்கொல்லர்கள் மூலம் தயாரிக்கப்படும் நாணயங்களுக்கு வரிவிலக்கு கிடையாது.
வணிக முத்திரை உடைய வெள்ளி நாணயங்களுக்கு, கலால் வரிச்சலுகை, தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. மத்திய அரசின், வரிச்சலுகை அறிவிப்பை தொடர்ந்து, தங்க நாணயங்களின் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, பிசி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர், பல்ராம் கார்க் கூறுகையில், ‘‘மத்திய அரசின், 1 சதவீத கலால் வரி ரத்து அறிவிப்பால், தங்க நாணயங்களின் விலை குறையும். இது, தங்க விற்பனைதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|