பதிவு செய்த நாள்
11 டிச2016
03:21

மும்பை:எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்சின், 3.9 சதவீத பங்குகளை விற்க, பாரத ஸ்டேட் வங்கி இயக்குனர் குழு, ஒப்புதல் அளித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான, எஸ்.பி.ஐ., லைப், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மதிப்பு, 46 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
இந்நிலையில், எஸ்.பி.ஐ., லைப் நிறுவனத்தின் பங்குகளை விற்க, பாரத ஸ்டேட் வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எஸ்.பி.ஐ., லைப், 3.9 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதன் மதிப்பு, 1,794 கோடி ரூபாய். இது குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது:எஸ்.பி.ஐ., லைப் நிறுவனத்தில், 70.1 சதவீத பங்குகளை, பாரத ஸ்டேட் வங்கியும், 26 சதவீத பங்குகளை, பி.என்.பி., பரிபாஸ் கார்டிப் நிறுவனமும் வைத்துள்ளன.
கே.கே.ஆர்., மற்றும் டெமாசெக் ஆகிய நிறுவனங்கள், தலா, 1.9 சதவீத பங்குகளை வாங்க உள்ளன. இந்த நிதியை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்கி, ஆயுள் காப்பீட்டு துறையில் முன்னணி நிறுவனமாக, எஸ்.பி.ஐ., லைப் திகழும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|