பதிவு செய்த நாள்
20 டிச2016
23:41

புதுடில்லி : சர்க்கரை விலையை, மக்கள் பாதிக்காத வகையில், நியாயமாக நிர்ணயிக்குமாறு, ஆலை உரிமையாளர்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தி உள்ளார்.
இந்திய சர்க்கரை ஆலை உற்பத்தியாளர்களின் கூட்டம், டில்லியில் நடந்தது. அதில் பங்கேற்ற, கட்கரி கூறியதாவது: மத்திய அரசு, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, ‘பயோ எத்த னால்’ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து, தனி கொள்கையை தயாரித்து வருகிறது. இது, சர்க்கரை தொழிலை ஊக்குவிக்கும். கரும்பில் இருந்து கிடைக்கும், உபபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை விலையை, மக்கள் பாதிக்காத வகையில், நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சர்க்கரை ஆலை கூட்டமைப்பின் தலைவர் தருன் சாவ்னே கூறியதாவது: சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான, மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எனவே, நடப்பு பருவத்தில், ஒரு கிலோ சர்க்கரை விலையை, 43 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை உயர்த்த, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|