பதிவு செய்த நாள்
20 டிச2016
23:42

மும்பை : கடந்த நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடுகளில், மொரீஷியஸ் நாடு, முதலிடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச்சுடன் முடிந்த, 2015 –16ம் நிதியாண்டில், 20,140 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, முந்தைய, 2014 – 15ம் நிதியாண்டில், 19,813 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இந்தியாவில், அதிகளவில் முதலீடு செய்த முதல் ஐந்து நாடுகளில், மொரீஷியஸ், அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான் ஆகியவை, இடம் பெற்று உள்ளன. நாட்டில் குவிந்த அன்னிய நேரடி முதலீடுகளில், பங்கு முதலீடுகள், 93.4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. அவற்றில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகள், மிக அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளன.
தயாரிப்புத் துறையில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது. சேவைகள் துறை, 8,59,080 கோடி ரூபாய் அளவிற்கு, பங்கு முதலீடுகளை பெற்றுள்ளது. மொத்த அன்னிய நேரடி முதலீடுகளில், 50 சதவீதம், தயாரிப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து, தகவல் மற்றும் தொடர்பு சேவைகள், நிதி மற்றும் காப்பீட்டு துறைகள், முறையே, 20.1 சதவீதம் மற்றும் 11.2 சதவீத பங்கு முதலீடுகளை திரட்டியுள்ளன.
மதிப்பீட்டு நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், அதிகளவில் சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளன. இதையடுத்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில், அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|