பதிவு செய்த நாள்
22 டிச2016
23:38

புதுடில்லி : மத்திய அரசு, சர்வதேச கூட்டுறவு திட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை மீண்டும் திருத்தி அமைத்துள்ளது.
இதன்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில், இந்தியாவில், தொழில் துறை சார்ந்த கண்காட்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்த, சர்வதேச கூட்டுறவு திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் அனுமதியின் பேரில், நிறுவனங்கள் நிதியுதவி பெறலாம்.
அதுபோல, இந்தியாவின் தொழில்நுட்பங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகியவற்றை பிரபலப்படுத்த, வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகள், கருத்தரங்குகள், விற்போர் – வாங்குவோர் சந்திப்புகள் ஆகியவற்றில் பங்கேற்க, தகுதியுள்ள நிறுவனங்களுக்கு, நிதியுதவி கிடைக்க, புதிய விதிமுறை வகை செய்கிறது. அவ்வாறு பங்கேற்க அனுமதி பெற்ற பின், குழுவில் மாற்றம் செய்ய முடியாது என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், சர்வதேச கூட்டுறவு திட்டத்தின் விதிமுறைகள் திருத்தியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|