பதிவு செய்த நாள்
22 டிச2016
23:39

மும்பை : அடுத்த ஆண்டில், இளம் ஊழியர்களில், 49 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், வேறு பணிக்கு மாற உள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
கல்வி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, டேலன்ட் எட்ஜ் நிறுவனம், எட்டு முக்கிய நகரங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் ஊழியர்களிடையே, நடத்திய ஆய்வு விபரம்: இந்த ஆய்வில், ௪௯ சதவீதத்தினர், வரும் ஆண்டில், வேறு நிறுவனத்திற்கு மாற உள்ளதாக தெரிவித்து உள்ளனர்; ௫௦ சதவீதத்திற்கும் அதிகமானோர், கணிசமான ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தங்களுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என, ஆய்வில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்து உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பு பெரிதாக உள்ளது. ஊதிய உயர்வு கிடைக்கும் எனவும், அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். பணி மாறும் ஆர்வம், ௨௫ – ௩௦ வயதினருக்கு அதிகமாகவும், 21 – 24 வயதினர் இடையே குறைவாகவும் உள்ளது. இப்பிரிவினருக்கு, பணி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அதிகம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|