பதிவு செய்த நாள்
22 டிச2016
23:40

புதுடில்லி : இந்தாண்டு, பல்வேறு நிறுவனங்கள், 5,260 கோடி டாலர் மதிப்பில், பிற நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இது, கடந்த ஆண்டு, 3,130 கோடி டாலராக இருந்தது.
அதேசமயம், இதே காலத்தில், நிறுவனங்கள், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தங்கள், 886லிருந்து, 756 ஆக குறைந்துள்ளது.இந்தாண்டு, குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், சில பெரிய நிறுவனங்கள் கைமாறியுள்ளன. அதில், ரோஸ்நெப்ட் குழுமம், எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை கையகப்படுத்தியதை முக்கியமாக குறிப்பிடலாம். இந்திய நிறுவனங்கள் கூட்டமைப்பு, ரஷ்யாவின் வன்கோர்நப்ட் எண்ணெய் வயல் ஒதுக்கீட்டை பெற்றுள்ளன. இது தவிர, மருந்துகள், நிதிச் சேவைகள், சிமென்ட், ஊடகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளிலும், 100 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்பில், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தாண்டு, குளோபல் பேஷன் குழுமத்தைச் சேர்ந்த, ஜபாங் நிறுவனத்தை, பிளிப்கார்ட் நிறுவனத்தின், மைந்த்ரா கையகப்படுத்தியுள்ளது. மேக்ஸ் லைப் நிறுவனம், எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்டு லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தொலை தொடர்பு கோபுரங்கள் பிரிவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. வரும் ஆண்டிலும், நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, ஏப்ரலில் அறிமுகமாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் துணை புரியும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|