பதிவு செய்த நாள்
28 டிச2016
23:23

புதுடில்லி : கடந்த நவ., மாதம், இந்தியா வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 8.91 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகளில், இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த நவ., மாதம், இந்தியா வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 8.91 லட்சமாக அதிகரித்துள்ளது.இது, 2015ம் ஆண்டின், இதே காலத்தில், 8.16 லட்சம்; 2014ல், 7.56 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. கடந்த நவ., மாதம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த, அன்னிய செலாவணி வருவாய், 14 ஆயிரத்து, 474 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 12 ஆயிரத்து, 649 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.
நடப்பாண்டில், ஜன., – நவ., வரையிலான காலத்தில், இந்தியா வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 78.53 லட்சம் என்றளவில் உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 71.14 லட்சமாக சரிவடைந்து இருந்தது. இதே காலத்தில், அவர்கள் மூலம் கிடைத்த வருவாய், 1.21 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த நவ., மாதம், இந்தியா வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, வங்க தேசம், கனடா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மலேஷியா ஆகிய நாடுகள் உள்ளன. மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்பால், சுற்றுலா வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|