புத்தாண்டில் 14 பில்லியன் மெசேஜ்களை அனுப்பி வாட்ஸ்ஆப் சாதனைபுத்தாண்டில் 14 பில்லியன் மெசேஜ்களை அனுப்பி வாட்ஸ்ஆப் சாதனை ... ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வட்டி சலுகை பட்­ஜெட்டில் அறி­விப்பு வர வாய்ப்பு ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வட்டி சலுகை பட்­ஜெட்டில் அறி­விப்பு வர ... ...
வோடபோனின் அடுத்த அதிரடி : ரூ.16 க்கு அன்லிமிடெட் டேட்டா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
15:32

புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 3ஜி மற்றும் 4ஜி டேட்டா சேவையை வழங்க வோடபோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வோடபோன் கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் 3ஜி அல்லது 4ஜி டேட்டா ரூ.16 என்ற விலையில் வழங்கப்படுகிறது. இதே போல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களும் (வோடபோன் எண்களுக்கு மட்டும்) ரூ.7 என்ற விலைக்கு வழங்கப்படுகிறது.
வோடபோன் அறிவித்துள்ள இந்த திட்டங்களுக்கு ஒரு மணி நேர வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹவர் திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் எல்லையில்லா டேட்டாவினை பயன்படுத்த முடியும். இச்சலுகை மூலம் அதிகளவு டவுன்லோடு, சர்ஃபிங் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சூப்பர் ஹவர் திட்டத்தை பயன்படுத்த முடியும் என வோடபோன் நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் சந்தீப் கட்டாரியா தெரிவித்துள்ளார்.
வோடபோன் புதிய திட்டத்தின் மூலம் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் 4ஜி / 3ஜி டேட்டாவினை ஒரு மணி நேரத்திற்கு பெற முடியும், ரூ.16க்கு வழங்கப்படும் இந்த சலுகை முதற்கட்டமாக ஜனவரி 7 ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அனைத்து வட்டாரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 9 ஆம் தேதி முதல் இந்த சலுகை கிடைக்கும் என்றும் சில வட்டாரங்களில் இவற்றின் விலை மாறுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வோடபோன் பிளே சேவையை மார்ச் 31, 2017 வரை இலவசமாக பயன்படுத்துவோருக்கு, இந்த சலுகையின் மூலம் அன்லிமிட்டெட் டேட்டா சலுகையை கொண்டு வோடபோன் பிளே மூலம் வீடியோ மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)