பதிவு செய்த நாள்
08 ஜன2017
02:16
பெங்களூரு:சர்வதேச வலைதள நிறுவனமான, ‘ஒன் பிளஸ்’, பெங்களூரில், முதன்முறையாக, ‘எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்’ எனும், புதுமையான கடையை திறக்க உள்ளது. இங்கு, வாடிக்கையாளர்கள், அந்நிறுவனத்தின் மொபைல் போன், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பார்த்து, திருப்தி அடையும் பட்சத்தில், அவற்றை, அதன் ஒன்பிளஸ் ஸ்டோர் மற்றும் அமேசான், வலைதளங்களில் வாங்கலாம். எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் வளாகம், 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துஉள்ளது.
இங்கு, சேவை மையம், சில்லரை விற்பனை, சிற்றுண்டி விடுதி உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் பொது மேலாளர், விகாஸ் அகர்வால் கூறுகையில், ‘‘நிறுவனத்திற்கு முக்கிய சந்தையாக திகழும் இந்தியாவில், முதல், எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரை திறப்பதில், பெருமை கொள்கிறோம்,’’ என்றார். இந்தியாவில், சிங்கிள் பிராண்டு சில்லரை விற்பனையில், முதன்முதலாக, மொபைல் போன் செயல்பாடுகளை ஆராய்ந்து தேர்வு செய்யும் முறை, அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|