பதிவு செய்த நாள்
14 ஜன2017
03:40
புதுடில்லி:பஜாஜ் கார்ப்., நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 57.79 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, 2015ம் ஆண்டின் இதே காலாண்டில், 49.31 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலாண்டுகளில், அந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 4.75 சதவீதம் சரிவடைந்து, 195.70 கோடி ரூபாயில் இருந்து, 186.39 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதர வருவாய், 7.77 கோடி ரூபாயில் இருந்து, 13.75 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த காலாண்டில், பஜாஜ் கார்ப்., நிறுவனம், அழகுசாதன பொருட்கள், கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்கள், தனிநபர் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்தது. இதனால், அந்த காலத்தில் நிறுவனத்தின் செலவு, 1.91 சதவீதம் சரிவடைந்து, 129.41 கோடி ரூபாயில் இருந்து, 126.93 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|