பதிவு செய்த நாள்
18 ஜன2017
03:03
புதுடில்லி: டைட்டன் நிறுவனம், தனிஷ்க், கோல்டு பிளஸ் ஆகிய பிராண்டுகளை, ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ளது.டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனம், கை கடிகார சந்தையில் ஈடுபட்டு வருகிறது. டைட்டன், ‘தனிஷ்க்’ என்ற பெயரில், தங்க நகை கடைகளை நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களில், கோல்டு பிளஸ் என்ற பெயரிலும், தங்க நகை கடை வைத்துள்ளது. இது, 1995ல் துவங்கப்பட்டது.இந்நிலையில், டைட்டன் நிறுவனம், தனிஷ்க், கோல்டு பிளஸ் ஆகிய பிராண்டுகளை, ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ளது.இது குறித்து, டைட்டன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியர்கள் விரும்பும் வகையில், அழகிய வடிவங்களில், தனிஷ்க் தங்க ஆபரணங்களை விற்பனை செய்கிறது. தற்போது, தென் மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களில், 30 கோல்டு பிளஸ் ஸ்டோர்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் விருப்பத்தை தொடர்ந்து தக்க வைக்க, டைட்டன் முடிவு செய்துள்ளது. இதற்காக, தனிஷ்க், கோல்டு பிளஸ் ஆகியவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|