பதிவு செய்த நாள்
18 ஜன2017
03:04
மும்பை: செல்லாத நோட்டு அறிவிப்பை அடுத்து, எஸ்.பி.ஐ., கார்டு, கடந்த டிச., மாதம், 1.05 லட்சம் கார்டுகளை வினியோகம் செய்துள்ளது.இந்தியாவில், ‘கிரெடிட் கார்டு’ வினியோகிப்பதில், எஸ்.பி.ஐ., கார்டு, இரண்டாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. கிரெடிட் கார்டு சந்தையில், இந்நிறுவனம், 2 கோடியே 73 லட்சம் கார்டுகளை கொண்டுள்ளது. மத்திய அரசு, கடந்த நவ., மாதம், செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டு, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு, அனைவரையும் வலியுறுத்தி வருகிறது.இதையடுத்து, எஸ்.பி.ஐ., கார்டு, கடந்த டிசம்பர் மாதத்தில் 1.05 லட்சம் கிரெடிட் கார்டுகளை வினியோகம் செய்துள்ளது.இதுகுறித்து, எஸ்.பி.ஐ., கார்டு அதிகாரி, விஜய் ஜசுஜா கூறியதாவது: டிசம்பர் மாதம் மட்டுமே, 1 லட்சத்து 5 ஆயிரம் புதிய கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 35 முதல் 40 சதவீதம் வரை செயல்பாட்டுக்கு வராமல் போனாலும் கூட, புதிதாக, 65,000 கார்டுகள் டிசம்பர் மாதத்தில் சேர்ந்துள்ளன.கடந்த சில மாதங்களாக சராசரியாக, ஒரு லட்சம் கிரெடிட் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவே ஓராண்டுக்கு முன், 65,000 என்ற அளவில்தான் இருந்தது.செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், தங்க ஆபரணங்கள், எரிபொருள் உள்ளிட்ட பிரிவுகளில் செலவழிப்பது கணிசமாக குறைந்திருந்தாலும், எஸ்.பி.ஐ., கார்டுகளின் மூலமாக செலவழிக்கப்பட்ட தொகை, 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|