பதிவு செய்த நாள்
23 ஜன2017
23:52

மும்பை : நேரடி விற்பனை மூலமாக, பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும் ஆம்வே இந்தியா நிறுவனம், அடுத்தகட்டமாக, சமையல் சாதனங்களை, ‘ஆம்வே குயின்’ என்ற பெயரில் அறிமுகம் செய்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ஆம்வே இந்தியா நிறுவனம், ஊட்டச்சத்து, அழகுப் பொருட்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள் ஆகிய பிரிவுகளில், 130க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது, முதன்முறையாக, நுகர்வோர் சாதனங்கள் பிரிவிலும் நுழைகிறது. ஆம்வே குயின் தயாரிப்புகள், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில், உணவின் சத்தும், ருசியும் கெட்டுப் போகாத வகையிலான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய தயாரிப்புகள், 30 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகின்றன. இருப்பினும், விலை விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
இது குறித்து, ஆம்வே இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி, அன்ஷு புத்ராஜா கூறியதாவது: எங்களது விற்றுமுதலில், 10 சதவீத பங்களிப்பை, இந்த சாதனங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அளிக்கும் வகையில், எங்கள் இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதுவே, இப்பிரிவில் சந்தையின் முன்னணி இடத்தில் எங்களை சேர்க்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|