பதிவு செய்த நாள்
23 ஜன2017
23:53

கவுகாத்தி : ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, கார் தயாரிப்பு நிறுவனமான, டொயொட்டா, தன் வாகனங்களின் விற்பனையில், இந்த ஆண்டு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என, கருதுவதாக தெரிவித்திருக்கிறது.
டொயொட்டா நிறுவனம், இந்தியாவில், கிரிலோஸ்கர் குழுமத்துடன் இணைந்து, கடந்த ஆண்டில், 1,34,149 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இருப்பினும், அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது, 4 சதவீத அளவுக்கு விற்பனை குறைந்துவிட்டது.
இது குறித்து, டொயொட்டா கிரிலோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனரும், விற்பனை பிரிவின் துணைத் தலைவருமான, என்.ராஜா கூறியதாவது: நடப்பு, 2017ல், எங்கள் இலக்கு, கடந்த ஆண்டில் விற்ற அளவுக்கு அல்லது அதைவிட சற்று அதிகமாக விற்பது என்று தான் வைத்திருக்கிறோம். தேவைக்கான சூழல், சந்தை எழுச்சி இவற்றை பொறுத்து, தேவைப்பட்டால் இலக்கை மாற்றிக் கொள்வோம். கடந்த ஆண்டை பொறுத்தவரை, விற்பனை சாதகமாக இருப்பினும், அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பு, இந்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என, கருதுகிறோம். பொதுவாக, டிச., மாதத்தை பொறுத்தவரை, வாகன சந்தையில் விற்பனை நன்றாக இருக்கும். கார் தயாரிப்பாளர்களும், கையிருப்பை முழுவதும் விற்பனை செய்ய, பல சலுகைகளை அறிவிப்பர். இருப்பினும், கடந்த இரு மாதங்களாக, வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக இருக்கிறது. மேலும், டில்லி, அதன் புறநகர் பகுதிகளில், நீதிமன்ற தடை காரணமாக, இன்னோவா, பார்ச்சூனர் ஆகிய வாகனங்களின் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|