பதிவு செய்த நாள்
25 ஜன2017
23:33
புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 132.67 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 120.21 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 2.8 சதவீதம் உயர்ந்து, 3,151.12 கோடி ரூபாயில் இருந்து, 3,239.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த காலாண்டில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்கள் விற்பனை, 4 சதவீதம் அதிகரித்து, 6.76 லட்சத்தில் இருந்து, 7.03 லட்சமாக உயர்ந்துள்ளது. அதில், மோட்டார் சைக்கிள் விற்பனை, 2.60 லட்சத்தில் இருந்து, 2.48 லட்சமாக குறைந்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனை, 2.32 லட்சத்தில் இருந்து, 2.21 லட்சமாக சரிவடைந்து உள்ளது. மொபட் விற்பனை, 1.84 லட்சத்தில் இருந்து, 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகனம் விற்பனை, 26 ஆயிரத்து, 225ல் இருந்து, 16 ஆயிரத்து, 081 ஆக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|