பதிவு செய்த நாள்
31 ஜன2017
04:40
புதுடில்லி : எச்.டி.எப்.சி., எனப்படும், ‘ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 2,728.66 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 2,419 கோடி ரூபாய் என்றளவில் குறைந்திருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 12 ஆயிரத்து, 253.90 கோடி ரூபாயில் இருந்து, 14 ஆயிரத்து, 981.41 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.எச்.டி.எப்.சி., நிறுவனம், கடந்த காலாண்டில், 1,701.21 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1,520.51 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. அந்நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய், 7,268.44 கோடி ரூபாயில் இருந்து, 8,137.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|