பதிவு செய்த நாள்
09 பிப்2017
00:53

புதுடில்லி : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், செய்தியாளர்களிடம் பேசியதாவது: அமெரிக்காவின் சிகாகோ வணிக பல்கலையில், நிதி துறை பேராசிரியராக, 1991ல் சேர்ந்தேன். இப்பல்கலை உடன், 25 ஆண்டுகளாக எனக்கு தொடர்பு உள்ளது. இடையில், 2003 – 06 வரை, சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் இயக்குனராக பணியாற்றினேன்.
கடந்த, 2013 – 16 செப்., வரை, ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து, தற்போது, மீண்டும், சிகாகோ வணிக பல்கலையில், பேராசிரியர் பணிக்கு திரும்பியுள்ளேன். இப்பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தினமும், சிகாகோவின், மிச்சிகன் ஆற்றோர சாலையில், மோட்டார் சைக்கிள் மூலம் பணிக்கு வருவது சுகமான அனுபவம். இது, என் வாழ்வின் மகிழ்ச்சி யான தருணங்களில் ஒன்றாக உள்ளது. பல்கலையில் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோதும், சில ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|