பதிவு செய்த நாள்
10 பிப்2017
14:51
புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் காரணமாக ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனை சரிவடைந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக ஆட்டோமொபைல் துறையில் 5 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனம், இரு மற்றும் 3 சக்கர வாகன விற்பனையில் முன்வேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 18 சதவீதம் வரை சரிவடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் கார், வேன் உள்ளிட்ட அனைத்து வகை வாகன விற்பனையும் சரிவடைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி கழகம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. கனரக வாகன விற்பனையும் 0.72 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|