பதிவு செய்த நாள்
16 பிப்2017
06:04

புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, அமேசான் நிறுவனம், அதன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, கோயம்புத்துார் மற்றும் நொய்டாவில், இரு வாடிக்கையாளர் சேவை மையங்களை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் மனிதவள துறை இயக்குனர் ராஜ் ராகவன் கூறியதாவது:எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு, மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்க, கோயம்புத்துார் மற்றும் நொய்டாவில், இரு வாடிக்கையாளர் சேவை மையங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம், தமிழகம் மற்றும் உபி.,யில், நுாற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; வாடிக்கையாளர்கள் பலதரப்பட்ட சேவைகளை, ஒரே இடத்தின் கீழ் பெற முடியும். கோயம்புத்துார் மற்றும் நொய்டாவில், வாடிக்கையாளர் சேவை மையங்கள், முறையே, ஏப்., மற்றும் ஜூன் மாதங்களில், செயல்பாட்டுக்கு வரும். இந்த மையங்களில் பணிபுரிய, விரைவில், ஆட்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|